பழனி முருகன் கோவிலில் 4 நாட்கள் மூலவர் தரிசனம் இல்லை

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 4 நாட்கள் மூலவர் தரிசனம் இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2023-01-12 18:45 GMT

பழனி முருகன் கோவில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 23-ந்தேதி மாலையில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. அப்போது சுவாமியை கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருள்வார். அதைத்தொடர்ந்து கருவறையில் திருப்பணிகள் நடைபெறும். இதனால் 23-ந்தேதி மாலை 3 மணி வரை மட்டுமே மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதையடுத்து 26-ந்தேதி வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதேவேளையில் யாகசாலையில் எழுந்தருளும் சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 27-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து மகாதீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம். மேலும் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள், இந்தியன் வங்கி பழனி கிளை கணக்கு எண் 899971944 (IFSC code:IDIB000P014) என்ற கணக்கில் நன்கொடை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்