பழனி நகராட்சி அலுவலகம் முற்றுகை-மறியல்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பழனி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-02-28 11:12 GMT

பழனி நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில், தனியார் நிறுவனத்தின் சார்பில் 5ஜி அலைக்கற்றைக்கான செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மருத்துவமனை, குடியிருப்புகள், அங்கன்வாடிமையம் உள்ள இந்த பகுதியில், செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பழனி நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள், திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அதிகாரிகள் தங்களை சந்திக்க மறுப்பதாக கூறி, பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்