தாமதமாக வந்த பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்

பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Update: 2023-09-30 12:20 GMT

தளி

பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை ரெயில் நிலையத்திற்கு தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

பயணிகள் ரெயில்

உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென்மாவட்டங்கள், ஆன்மிகம், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு விரைவு, பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான பயணிகள் குறைவான கட்டணத்தில் குடும்பத்துடன் பாதுகாப்பான பயணத்தை பெற்று பயனடைந்து வருகின்றனர். முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயிலில் பவுர்மணி, பொது விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.

தற்போது தொடர் விடுமுறை உள்ளதால் கடந்த 3 நாட்களாக திருச்செந்தூர் ரெயிலில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் நேற்று பாலக்காடு-திருச்செந்தூர் ரெயிலில் திருச்செந்தூருக்கு செல்வதற்காக ஏராளமான பொதுமக்கள் அதிகாலை 6 மணி முதலே உடுமலை ரெயில் நிலையத்தில் திரண்டனர். ஆனால் வழக்கமாக 7.45 வரும் தரும் ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக 8.30 மணிக்கு வந்தது. இதனால் கைக் குழந்தையுடன் காத்திருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

அறிவிப்பு

ரெயில் கால தாமதத்திற்கு உண்டான தகவல், உடுமலை ரயில் நிலையத்திற்கு எப்போது வந்தடையும் என்று கூட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கவில்லை. முறைப்படி தெரிவித்து இருந்தால் பொதுமக்கள் காலை உணவை அருந்தி புத்துணர்வோடு பயணித்து இருப்பார்கள். எனவே ரெயில் காலதாமதத்தை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்