முனீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

வாய்மேடு அருகே அண்ணாபேட்டை முனீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.

Update: 2023-05-08 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு அருகே அண்ணாபேட்டையில் பெத்தரன்யசாமி, முனீஸ்வரர், காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்்து விழா நாட்களில் தினமும் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் மஞ்சள் நீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காமாட்சி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து குதிரை வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்