அய்யா வைகுண்டர் கோவிலில் சித்திரை திருவிழா

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு அய்யா வைகுண்டர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.

Update: 2023-05-09 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரை திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான 7-ந்தேதி சிறப்பு பணிவிடை, உச்சிகால பணிவிடை, இரவு சிறப்பு பணிவிடை, அன்னதானம், தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் சிறப்பு பணிவிடை, வெளியூர் தர்மம், இரவு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.

நேற்று மதியம் சிறப்பு பணிவிடை, செண்டை மேளத்துடன் அய்யா உள்ளூர் தர்மம் எடுத்தல், இரவு பணிவிடை, அய்யா அன்ன வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (புதன்கிழமை) காலை இனிமம் வழங்குதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நிழல்தாங்கல் நிர்வாக கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்