மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

தேனி பி.எஸ்.என்.எல். அலுவலகம் சார்பில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

Update: 2023-09-24 22:30 GMT

தேனி கோட்ட பி.எஸ்.என்.எல். அலுவலகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 'பி.எஸ்.என்.எல். பாரத் பைபர் பயன்படுத்தி ஸ்மார்ட் கல்வி கற்றல்' என்ற தலைப்பில் இந்த ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் 5 வயது முதல் 10 வயது வரையுள்ள மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டிகளை தேனி கோட்ட பி.எஸ்.என்.எல். பொறியாளர் சோபியா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 400 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் ஓவியங்களை வரைந்தனர்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறும்போது, "ஒருங்கிணைந்த மதுரை, தேனி, திண்டுக்கல் கோட்ட அளவில் இந்த ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அந்தந்த கோட்டங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த 3 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தற்போது போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதிர்ஷ்டப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்