பெயிண்டரை தாக்கியவர் கைது

பெயிண்டரை தாக்கியவர் கைது

Update: 2023-08-14 19:45 GMT

கோவை

கோவை சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 40), பெயிண்டர். இவருடைய சகோதரி கணவர் பிரதீபன் (47) என்பவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரதீபனின் மனைவி, தனது தம்பியான ராஜேஷ் குமாரிடம் கியாஸ் சிலிண்டர் கேட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பிரதீபன் தட்டிக்கேட்டார். இதனால் பிரதீபனுக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன், அங்கு கிடந்த கட்டையை எடுத்து ராஜேஷ் குமாரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபனை கைது செய்தனர்.

-

Tags:    

மேலும் செய்திகள்