ஓவியர் சங்க கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஓவியர் சங்க கூட்டம் நடந்தது

Update: 2022-09-05 18:56 GMT

திருவாரூர் மாவட்ட ஓவியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர் மங்கை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காந்திராஜன், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுரவ தலைவர் ரவி, துணை செயலாளர்கள் சிவசங்கரன், மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மநாதன், ஆலோசகர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓவியர் நல வாரியத்தில் அனைத்து ஓவியர்களையும் இணைத்து அரசு உதவிகளை பெற்றுத் தருவது. ஓவிய எழுத்து வேலைகளை தமிழ்நாடு ஓவியர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஓவியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்