போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெயிண்டர்

போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க பெயிண்டர் முயன்றாா்

Update: 2023-08-22 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் காரை வெங்கட் (வயது 48).பெயிண்டர்..இவர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அது குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய வெங்கட் நேற்று இரவு 7.30 மணியளவில் பெட்ரோல் நிரம்பிய கேன் ஒன்றோடு வடக்கு போலீஸ் நிலையம் வந்தார்.

பின்னர் அவர் போலீஸ் நிலையம் முன்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெட்ரோலை தலையில் ஊற்றிக் கொண்டு சிகரெட் லைட்டர் மூலம் தனக்குத்தானே தீ வைத்துக் கொள்ள முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் பெட்ரோல் கேனையும் சிகரெட் லைட்டரையும் பறித்து வெங்கட் தலையில் தண்ணீரை ஊற்றி அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறினர் அதன் பின் அவர் வீடு திரும்பினார். இதனால் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்