ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய பெயிண்டருக்கு 3 ஆண்டு சிறை

ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய பெயிண்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது

Update: 2022-05-30 14:34 GMT

கோவை

கோவை க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 47). பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜெகதீஷ் அந்த பள்ளி மாணவனை மறைவிடத்திற்கு அழைத்து சென்று ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பள்ளி மாணவன் அதற்கு மறுத்து விட்டு, அவரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், பள்ளி மாணவனை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய பெயிண்டர் ஜெகதீஷ்க்கு 3 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்