விருதுநகரில் பெயிண்டர் கொலை

விருதுநகரில் பெயிண்டர் மர்மமான முைறயில் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-07-27 19:44 GMT

விருதுநகரில் பெயிண்டர் மர்மமான முைறயில் கொலை செய்யப்பட்டார்.

வாலிபர் கொலை

விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகர் பகுதியில் நேற்று காலை புதர் பகுதியில் வாலிபரின் உடல் வெட்டுக்காயங்களுடன் கிடந்தது. வாலிபரின் உடல் கிடந்த இடத்திற்கு சற்று அருகில் அவரது கைலி கிடந்ததோடு, பற்களும் உடைந்து சிதறி கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மர்மமான முறையில் கொலையுண்டு கிடந்த வாலிபர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் முத்தால் நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரின் மகன் மாரிச்செல்வம் (வயது 19) என்பதும். கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

மேலும் மாரிச்செல்வம் தன் தந்தையுடன் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கும் அடிமையானதால் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே சென்றால் சில தினங்கள் கழித்து தான் வீடு திரும்புவதும் வழக்கம் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து முத்தால் நகரில் மாரிச்செல்வத்துடன் தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்