சிவகாசி,
திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் முத்துக்கனி மகன் பாலகுருசாமி (வயது 30). பெயிண்டர். இந்தநிலையில் சம்பவத்தன்று சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார், பாலகுருசாமியின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகுருசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முத்துக்கனி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த சிவகாசி முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்த நிசார்அகமது என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.