கார் மோதி பெயிண்டர் பலி

கார் மோதி பெயிண்டர் பலியானார்.

Update: 2023-09-10 18:03 GMT

க.பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி அண்ணா நகரை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 60). பெயிண்டரான இவர், நேற்று காலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தண்ணீர் பந்தலுக்கு வந்துள்ளார். பின்னர் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை கடந்தபோது திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மருதமுத்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து விபத்ைத ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி காஜாமலை திருமுருகன் நகரை சேர்ந்த இளையராஜா என்பவர் மீது க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்