மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

பாளையங்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

Update: 2022-06-08 21:42 GMT

நெல்லை:

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ஜெபமாலை 1-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது.

இந்தநிலையில் ரமேஷ் நேற்று பாளையங்கோட்டை அருகே இட்டேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சென்று இருந்தார். அப்போது அவர் சுவற்றில் தண்ணீர் நனைப்பதற்காக மின்மோட்டாரை இயக்கினார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உடனே பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்