பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-27 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 52), பெயிண்டர். இவருக்கு மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் இறந்து விட்டாள். இதனால் மனோகருக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் மனோகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்