பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவிலில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-08-17 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 32), பெயிண்டர். இவருக்கு தேவி என்ற மனைவி உண்டு. சக்தி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து தேவி பெருவிளையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை சக்தி செலுத்தாமல் இருந்தார். இதுதொடா்பாக விசாரிக்க தேவியின் தாயார் சக்தி வீட்டுக்கு சென்றார். அப்போது சக்தி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். விசாரணையில் கடனை திருப்பி செலுத்த முடியாத வேதனையில் சக்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-----


Tags:    

மேலும் செய்திகள்