குளத்தில் மூழ்கி பெயிண்டர் பலி

பாவூர்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி பெயிண்டர் பலியானார்.

Update: 2023-03-15 18:45 GMT

பாவூர்சத்திரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் பகுதி சின்னப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் சித்திரை குமார் (வயது 48). இவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள திரவியநகர் ஊரில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஊர் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுதொடர்பாக தென்காசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சித்திரைகுமார் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்