பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா எடப்பாடி கே.பழனிசாமி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை கவுந்தரராஜன் பங்கேற்பு

ஆரணியில் ஏ.சி.எஸ்.கல்விக்குழுமத்தின் சார்பில் கட்டப்பட்ட வெங்கடாசலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-17 16:53 GMT

ஆரணி

ஆரணியில் ஏ.சி.எஸ்.கல்விக்குழுமத்தின் சார்பில் கட்டப்பட்ட வெங்கடாசலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலையில் ஏ.சி.எஸ்.கல்விக் குழும தலைவர் ஏ.சி.சண்முகம் அவரது சொந்த முயற்சியில் புதிதாக கட்டிய ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பதி திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர் என 60-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கலந்துகொண்டு வேத மந்திரங்கள் முழங்க 5 கால யாகபூஜைகள் நடத்தினர்.

பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை மங்கள வாத்தியங்களுடன் கோவில் வலம் வந்து கருவறை கோபுரம், ராஜகோபுரம், விநாயகர், பக்த ஆஞ்சநேயர், பத்மாவதி தாயார், ஆண்டாள், கல்யாண சீனிவாச பெருமாள், கருவறை வெங்கடாஜலபதி சாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.

பிரமுகர்கள்

கும்பாபிஷேக விழாவில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கே.பி. அன்பழகன், தங்கமணி, வேலுமணி, முக்கூர் என். சுப்பிரமணியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தூசி கே. மோகன், எஸ்.ஆர்.கே.அப்பு, சு.ரவி, ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரி பி.பாபு,

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் அ.கோவிந்தராசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஜி.ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர். எம்.பாபு முருகவேல், நளினி மனோகரன், வி.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி.செஞ்சி வி.ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் போளுர் சி.ஏழுமலை,

ஆற்காடு, ஆரணி எஸ்.எஸ்.எஸ். மகளிர் கல்லூரி தாளாளர் ஏ.என்.நடராஜன், திரைப்பட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், திரைப்பட தயாரிப்பாளர்கள் சுந்தர் சி, ஏ.எல்.அழகப்பன், கலைப்புலி தாணு, ஆர்.கே.செல்வமணி, நடிகர் பாண்டியராஜன், விஜிபி சந்தோஷ், நடிகர் பார்த்திபன்,

மடாதிபதிகள்

மேலும் ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சாமிகள், கேரள மாநிலம் சபரிமலை சன்னிதான முன்னாள் மேல்சாந்தி கோஷல விஷ்ணு வாசுதேவ நம்பூதிரி உள்பட தமிழகத்தில் பல்வேறு ஆதீனங்களின் மடாதிபதிகள் (சன்னிதானங்கள்), பல்கலைக்கழக வேந்தர்கள் உள்பட திரளான பக்தர்கள கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் புனிதநீர் நிரப்பிய வெள்ளிக் கலச சொம்பு வழங்கி விழாக்குழு தலைவர் ஏ. சி.சண்முகம் கவுரவித்தார்.

ஏற்பாடுகளை ஏ.சி.எஸ். கல்விக் குழும தலைவர் ஏ.சி. சண்முகம், நிர்வாக இயக்குனர்கள் லலிதா லட்சுமி சண்முகம், ஏ.சி.எஸ்.அருண்குமார், ஆ.ரவிக்குமார், செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி மற்றும் கல்லூரி முதல்வர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.b

மேலும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆரணி தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் ஆகியோர் தலைமையில் முள்ளிப்பட்டு கூட்ரோடு அருகிலும், ஆவின் தலைவரும், நகர மன்ற துணைத் தலைவருமான பாரி பி.பாபு தலைமையில் ஆரணி அண்ணா சிலை அருகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நகர, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், வக்கீல் கே.சங்கர், ஜெயப்பிரகாஷ், ஜி.வி.கஜேந்திரன், பி.திருமால் உள்பட நிர்வாகிகள் ஆங்காங்கே அலங்கார வளைவுகள் அமைத்து இருந்தனர்.

==============

Tags:    

மேலும் செய்திகள்