நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்‌

நீடாமங்கலத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்‌ அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-06-16 13:46 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து சென்னை கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்லை சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்குகம் பணி நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தெற்கு நத்தம், மூவாநல்லூர், பாமணி, அசேஷம், ராஜகோபாலபுரம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் நெல் 166 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 58 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் வட சென்னை கொருக்குப்பேட்டை பகுதிக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்