2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்

குறுவை பருவ நெல் கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்தில் 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

Update: 2023-07-12 18:45 GMT

சிவகங்கை

குறுவை பருவ நெல் கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்தில் 2 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

கொள்முதல் நிலையம்

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் பயிரிடப்படும் குறுவை நெல் சாகுபடியை கொள்முதல் செய்வதற்காக நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் மாவட்டத்தில் கல்லல் வட்டாரத்தில் எஸ்.ஆர். பட்டினத்திலும், திருப்புவனம் வட்டாரத்தில் திருமாஞ்சோலையிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னோடி விவசாயி தமராக்கி ராமலிங்கம் கூறியதாவது:- மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய அரசின் சார்பில் கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

உற்பத்தி அதிகரிக்கும்

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் முறையாக கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் குறுவை சாகுபடி உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்