சாலையில் காயவைத்திருந்த நெல்மணிகள் நனைந்தன

நாகை பகுதிகளில் பலத்த மழையால் சாலையில் காயவைத்திருந்த நெல்மணிகள் நனைந்தன.

Update: 2023-10-16 18:45 GMT

நாகையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும், நாகை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான வெயில் காணப்பட்டது. நேற்று அதிகாலை முதலே நாகையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை 1 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் செல்லூர், பாலையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்து சாலையில் காய வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்தன. வாய்க்காலில் தேங்கி கிடந்த தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து பயிர்களை காப்பாற்றி அறுவடை செய்துள்ளோம். இந்தநிலையில் அறுவடை செய்த நெல்மணிகளும் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்