மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம்
சிக்கலில் காயவைத்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.
கடந்த 1 மாதமாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் சூழ்நிலை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்வேளூர், சிக்கல் பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று சிக்கல், பொரவச்சேரி, சங்கமங்கலம், பெருங்கடம்பனூர், புலியூர், ராமர்மடம், ஆழியூர், அகரகடம்பனூர், கோவில் கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்்த மழை 1 மணிநேரம் பெய்தது. இந்தநிலையில் சிக்கல், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்த நெல் மணிகளை சாைலயில் விவசாயிகள் காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த மழையால் காயவைத்து இருந்த நெல் மணிகள் நனைந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.