சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடவாசல் அருகே சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2022-12-05 19:15 GMT

குடவாசல்;

திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடவாசல் அருகே சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பயிர்கள் மூழ்கின

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் இரவு பரவலாக கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக குடவாசல் தாலுகாவில் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் குடவாசல் அடுத்துள்ள விளாகம், திருவீழிமிழலை, செருகுடி, திருப்பாம்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நிவாரணம்

இப்பகுதியில் ஓடும் கீர்த்திமான் ஆறு தூர்வாராத நிலையில் மழைநீர் வடிய ஒரு வார காலம் ஆகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.எனவே வருவாய் துறை, வேளாண்மை துறை, அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்