உசிலம்பட்டி அருகே காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதம் - விவசாயிகள் வேதனை
உசிலம்பட்டி அருகே காட்டுப்பன்றிகளால் நெற்பயிர் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியை அடுத்த செல்லம்பட்டி பகுதியில் உள்ள ஆரியபட்டி, குப்பணம்பட்டி, கன்னியம்பட்டி, கட்டக்கருப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் 2-வது போகம் நெற்பயிரை பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் புத்தூர் மலையில் இருந்து காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து நெற்கதிர்களை இரவு நேரங்களில் சேதப்படுத்திவிட்டு அருகில் உள்ள கண்மாய் பகுதிகளுக்கு சென்று விடுகிறது. அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்கதிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.. எனவே உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் மேலும் காட்டு பன்றிகள் வராமல் தடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.