வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் படுகாயம்

வாகனம் மோதியதில் பாதயாத்திரை பக்தர் படுகாயமடைந்தார்.

Update: 2023-08-28 19:30 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள முருகத்தூரான்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ் (வயது 70). இவர் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி நோக்கி சென்ற ஏதோ ஒரு வாகனம் சேசுராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் காயமடைந்த சேசுராஜை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்