காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

பாப்பிரெட்டிப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.

Update: 2022-08-14 17:28 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டியில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு காங்கிரஸ் வட்டார தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான தீர்த்தராமன் பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசினார். பாப்பிரெட்டிப்பட்டியில் காமராஜர் சிலை முன்பு தொடங்கிய இந்த யாத்திரை அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி வழியாக சென்று புதுப்பட்டியில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கணேசன் பிள்ளை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் குமரேசன், நகர தலைவர் மாணிக்கம், கடத்தூர் நகர தலைவர் குமார், நிர்வாகிகள் ஜெய்சங்கர், வடிவேல், வேடியப்பன், நடராஜன், அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்