பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாக்கெட்டுகள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் ஒழிப்பதற்கும், போலி மதுபாட்டில்கள் விற்பனையை ஒழிக்கவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வாணியம்பாடி- நாட்டறம்பள்ளி -கொத்தூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் 1152 மது பாக்கெட் அடங்கிய அட்டை பெட்டிகள் இருந்தது. இதையடுத்து மதுபாக்கெட்டுகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.