பா.ஜனதா சாலை மறியல்

சிங்கம்புணரியில் பா.ஜனதாவினர் சாலை மறியல் செய்தனர்

Update: 2023-08-07 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கருணாநிதி குறித்து சிங்கம்புணரியை சேர்ந்த பா.ஜனதா ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முத்துபிரகாஷ் அவதூறு ஏற்படுத்தியதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் முத்து பிரகாஷை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதை கண்டித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையம் முன்பு காரைக்குடி- திண்டுக்கல் சாலையில் அரசு டவுன் பஸ்சை வழி மறித்து பா.ஜனதாவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் கட்சி நிர்வாகிகளிடம் சமாதானம் பேசினார். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இச்சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்