சாலையில் சுற்றித் திரிந்து பிடிபட்ட மாடுகளை அபராதம் செலுத்தி பெற்றுச் சென்ற உாிமையாளர்கள்

நெல்லை மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்து பிடிபட்ட மாடுகளை உாிமையாளர்கள் அபராதம் செலுத்தி பெற்றுச் சென்றனர்.

Update: 2022-12-13 20:04 GMT

நெல்லை மாநகர பகுதியில் சாலையில் அதிகளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகராட்சி பகுதிகளான பாளையங்கோட்டை, நெல்லை, டவுன், மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அடைத்தனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மாடுகள் ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் அந்த மாடுகளின் உரிமையாளர்கள், மாடுகளுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டதை மாநகராட்சியில் செலுத்தி மேலும் இனி சாலையில் மாடுகளை திரிய விட மாட்டேன் என்று உறுதிமொழி கடிதமும் எழுதிக் கொடுத்து மாட்டை பெற்று சென்றனர். ஒரு மாட்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்