பேக்கரி கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்ற உரிமையாளர் கைது

நாட்டறம்பள்ளி அருகே பேக்கரி கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-04 17:51 GMT

நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நாட்டறம்பள்ளி அருகே முத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 40) என்பவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 384 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையெடுத்து ஏழுமலையை கைது செய்து, 384 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஏழுமலையை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்