காயங்களுடன் உயிருக்கு போராடிய வெளிநாட்டு ஆந்தை மீட்பு

தேவகோட்டையில் காயங்களுடன் உயிருக்கு போராடிய வெளிநாட்டு ஆந்தை மீட்கப்பட்டது.

Update: 2023-04-19 18:45 GMT

தேவகோட்டை

பார்ன் ஓவல் என்று அழைக்கப்படும் களஞ்சிய ஆந்தை உலகில் மிகவும் பரவலாக காணப்படும் ஆந்தை இனமாகும். இது பாலைவன பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் காணப்படும். இந்தியாவில் வடக்கு பகுதி மற்றும் இந்தோனேசியா மற்றும் சில பசிபிக் தீவுகளில் இவ்வகை ஆந்தையானது காணப்படும் எனக்கூறப்படுகிறது. இந்த வகையை சேர்ந்த ஆந்தை ஒன்று நேற்று தேவகோட்டை குதிரை எடுப்பு பாதையில் காயங்களுடன் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து ஆந்தையை பிடித்தனர். மேலும், கண்டதேவி ரோட்டில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆந்தையின் இரண்டு இறக்கைகளிலும் காயம் இருந்தது. அதற்கு கால்நடை மருத்துவர் கவின் சிகிச்சை அளித்தார். அதன் பின்னர் வனத்துறையினரிடம் இந்த அரிய வகை ஆந்தை ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்