வாகனம் மோதி ஆந்தை காயம்

கொடைக்கானலில் வாகனம் மோதி ஆந்தை காயம் அடைந்தது.

Update: 2023-06-20 16:45 GMT

கொடைக்கானல் நாயுடுபுரம் அருகே வில்பட்டி, பள்ளங்கி கிராமங்களுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் நேற்று காலை சாலையோரத்தில் ஆந்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆந்தை மீது மோதியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆந்தையை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவகுழுவினர் ஆந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆந்தையை வனத்துறையினர் விட்டனர்.

விபத்தில் சிக்கிய ஆந்தை ராக் எனும் அபூர்வ வகையை சேர்ந்தது ஆகும். அதன் சிறகுகள் சுமார் 6 மீட்டர் நீளம் உள்ளது. இது வனப்பகுதியில் உள்ள மலை முகடுகளின் இடையே வாழ்பவை. வனப்பகுதியை விட்டு வெளியேறிய இந்த ஆந்தை வாகனத்தின் மீது மோதியதில் காயம் அடைந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்