சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

சாலையோர பள்ளத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது.

Update: 2023-02-02 18:45 GMT

பனைக்குளம், 

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் இருந்து மீன்பிடி விசைப்படகின் அடிப்பகுதியில் உள்ள இலை ஒன்றை வேலை பார்ப்பதற்காக சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றி ராமேசுவரம் நோக்கி அந்த சரக்கு வாகனம் புறப்பட்டுள்ளது. அதை சின்ன முட்டம் பகுதியை சேர்ந்த டிரைவர் திலகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் கிளின்டன் என்பவரும் வந்தார். இந்த சரக்கு வாகனம் நேற்று காலை உச்சிப்புளி அருகே அரியமான் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்து குறித்து அறிந்த உச்சிப்புளி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் விரைந்து சென்று ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த சரக்கு வாகனத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்