மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-07 18:46 GMT

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கி, காப்பீடு திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்