மினி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்; ம.தி.மு.க. மனு

மினி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ம.தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2023-09-23 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி நகர பஸ்நிலையத்தில் இருந்து கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரியும், மினி பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நகர ம.தி.மு.க. செயலாளர் பால்ராஜ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நகர துணை செயலாளர் குழந்தைவேலு, ராமர், இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செண்பகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்