கீழடி அருங்காட்சியகத்தை கடந்த மாதத்தில் 40 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

கீழடி அருங்காட்சியகத்தை கடந்த மாதத்தில் 40 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

Update: 2023-08-18 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். கீழடி அருங்காட்சியகத்தில் தினசரி சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வெளி மாநிலத்தினர், வெளிநாட்டினர் என ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தினமும் சுமார் 1500 பேர் வந்து செல்கின்றனர். விடுமுறை காலங்களில் எண்ணிக்கை அதிகரித்து தினமும் சுமார் 2000 பேர் வரை பார்வையிட்டு செல்கின்றனர். அருங்காட்சியகத்திற்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டுள்ளனர். நேற்று கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட மதுரை நகர், புறநகர் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்கள் அருங்காட்சியக உள்பகுதியில் குரூப்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்