ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு

ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2022-12-31 18:45 GMT

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு, திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இந்த பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து குறைகளை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த புறக்காவல் நிலையம் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது. மேலும் தற்போது கண்காணிப்பு கேமரா காலத்தின் கட்டாயமாக உள்ளது. கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். நடைபெற்ற குற்றங்களை எளிதாகவும் கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் இன்னும் கேமராக்கள் பொருத்த நீங்கள் முன்வர வேண்டும் என்றார்.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சபாபதி, ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் உள்பட கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்