"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்ட வட்டார குழுக்கூட்டம்

"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்ட வட்டார குழுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-24 19:45 GMT

"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தினுடைய பெரம்பலூர் வட்டார குழுக்கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டான்லி செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி, அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி நடைமுறைப்படுத்தப்பட்டதை உறுதி செய்தல். பள்ளிகளில் பணியாற்ற கூடிய தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்தல். பள்ளிகளில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்ட செயல்பாடுகளில் உள்ளூர் தன்னார்வ தொண்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்பதை உறுதி செய்தல். இந்த திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படக் கூடிய பள்ளியை வட்டார அளவில் தேர்ந்தெடுத்து மாவட்ட அளவிலான சிறந்த தூய்மை பள்ளிக்கான விருதிற்கு பரிந்துரை செய்தல். பள்ளிகளில் மரக்கன்று நடுதல், காய்கறி தோட்டம் அமைத்தல், தூய்மையான குடிநீர் வழங்குதல், கழிவறைகளை சுகாதாரமாக பராமரித்தல், வகுப்பறையை தூய்மையாக வைத்துக்கொள்ளல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதலை தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றுதல் உள்ளிட்ட 10 செயல்பாடுகளையும் பின்பற்றுதல் ஆகிய பொருட்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் உறுப்பினர்களான பள்ளி தலைமை ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்