ஓட்டப்பிடாரம் ஆதிபராசக்தி மன்றத்தில் ஆடிப்பூர கலசவிளக்கு வேள்வி பூஜை
ஓட்டப்பிடாரம் ஆதிபராசக்தி மன்றத்தில் ஆடிப்பூர கலசவிளக்கு வேள்வி பூஜை நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் 83-வது அவதார பெருமங்கல விழா மற்றும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து இணைச்செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் ராமு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேள்விக்குழு இணைச்செயலாளர் கிருஷ்ண நீலா, வட்டத் தலைவர் செல்வம், திருவிக சக்தி பீடம் பத்மாவதி, மன்ற பொறுப்பாளர்கள் பரமசிவன், ரமேஷ், மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.