ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் www.nvsp.gov.in என்ற இணையதளத்திலும் voters help line என்ற மொபைல் ஆப் மூலமாகவும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 262 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த வாய்ப்பினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.