ஒட்டநத்தம் வெங்கடாசல பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஒட்டநத்தம் வெங்கடாசல பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடக்கிறது.

Update: 2023-07-05 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசல பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. அன்று மாலையில் பெருமாள் பூவராகர் திருக்கோலத்தில் திவ்ய அலங்கார சேவை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் எம்பெருமான் சக்கரத்தாழ்வார் திருக்கோலத்தில் திவ்ய அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று காலையில் எம்பெருமான் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் திவ்ய அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலையில் எம்பெருமாள் சயன திருக்கோலத்தில் திவ்ய அலங்கார சேவை நடந்தது.

விழாவின் சிகர நாளான இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் ராஜாங்க திருக்கோலத்தில் திவ்ய அலங்கார சேவை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 9.45 மணியளவில் வெங்கடேச பெருமாள், பரிவார மூர்த்திகள் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு உற்சவர் எம்பெருமான் ராஜாங்க அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்