ஒட்டன்சத்திரம் ஆட்டு சந்தை களை கட்டியது
தீபாவளி பண்டிகையையொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டு சந்தை களை கட்டியது.
ஒட்டன்சத்திரத்தில் ஆட்டு சந்தை உள்ளது. இந்த சந்தை வாரந்தோறும் வியாகிழக்கிழமை நடைபெறும். இங்கு ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த விவசாயிகளும், பழனி, தேனி, மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் ஆடுகளை வர்த்தகம் செய்ய வருவார்கள். இந்நிலையில் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சந்தை களை கட்டியது. காலை முதலே விவசாயிகள், வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர். அவர்கள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து வியாபரிகள் கூறுகையில்,
சந்தையில் குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்தது. இதனால் ஆடுகளுக்கு கடும் கிரகாக்கி ஏற்பட்டது. சுமார் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.9,500 வரை விற்பனையானது. சுமார் ரூ.1 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றது என்றனர்.