இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இ-சேவை மையம் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் முகாம்

ஸ்ரீவைகுண்டத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இ-சேவை மையம் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது.

Update: 2023-09-02 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

கருங்குளம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இ- சேவை மையம் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், மரிய ஜெயசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கடன் வசதி வங்கியில் இருந்து உடனடியாக பெற்று இ-சேவை மையம் ஆரம்பிப்பதற்கான கணினி உபகரணம் பெறுவதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருங்குளம் வங்கி கிளை மேலாளர் கோபால் சுப்பிரமணியன், குருவிகுளம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ் ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை கூறினர். ஏற்பாடுகளை கருங்குளம் இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ் செய்திருந்தார். நிகழ்ச்சியில் வட்டார இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பீபேகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வெயில்முத்து, கருங்குளம் வட்டார மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்