வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் சாதாரண குழு கூட்டம்

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-12 18:53 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி சாதாரண குழு கூட்டம் தலைவர் மார்க்கெட் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் எட்வின் ஆர்தர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மேற்பார்வையாளர், செயல் அலுவலர் மருதுபாண்டியன் வரவேற்று பேசினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்