முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை

நாட்டறம்பள்ளியில் நடந்த ஜமாபந்தியில், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

Update: 2023-06-07 18:02 GMT

ஜமாபந்தி

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக ஜமாபந்தி நடைபெற்றது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பொது மக்கள், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் நாட்டறம்பள்ளி உள்வட்டத்திற்கு உட்பட்ட மல்லகுண்டா, குருபாவாணிகுண்டா, தெக்குப்பட்டு, மல்லங்குப்பம், பெத்தகல்லுபள்ளி, கேதாண்டப்பட்டி, வேட்டப்பட்டு, பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், கொல்லங்குட்டை, சந்திரபுரம், விருப்பாட்சிபுரம், பணியாண்டப்பள்ளி, மல்லப்பள்ளி, அம்மணாங்கோயில் ஆகிய 15 கிராமங்களின் தீர்வை கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் உதவித்தொகை

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பொது பிரச்சினைகள் என 55 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அதில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜமாபந்தி நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.1¾ லட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணை, ஒருவருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் (நில அளவை) செந்தில்குமார், அலுவலக மேலாளர் (நீதியியல்) உமாரம்யா, தாசில்தார் குமார், தனி தாசில்தார் சுமதி, வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன், துணை தாசில்தார் சித்ரா, வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்