ஓ.பி.எஸ். மாநாட்டிற்கு அழைப்பு வருமா? இல்லையா? - சிரித்துக்கொண்டே பதில் கூறிய டிடிவி தினகரன்

ஓ.பி.எஸ். மாநாடு குறித்து ஊடகங்களில் வாயிலாக அறிந்ததாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

Update: 2023-04-14 11:45 GMT

சென்னை,

ஓ.பி.எஸ். மாநாட்டிற்கு அழைப்பு வருமா? இல்லையா? என்பது குறித்து தனக்கு தெரியாது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்த ஆண்டு இறுதியில் முடிவெடுக்கப்படும். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சிறந்த புத்தாண்டாக பிறக்கும் என்று நம்புகிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் மாநாடு குறித்து ஊடகங்களில் வாயிலாக அறிந்தேன். மாநாட்டிற்கு அழைப்பு வருமா? இல்லையா? என்பது குறித்து தனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Full View


Tags:    

மேலும் செய்திகள்