பூலித்தேவன் சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர் எம்.பி, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பி.அய்யப்பன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. அ.மனோகரன், ராதா, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்தி பாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் மனோஜ் பாண்டியன் கூறுகையில், "நெற்கட்டும்செவல் கிராமத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.