டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
சுரண்டை அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு; தாலுகா அலுவலகம் முற்றுகை
சுரண்டை:
சுரண்டை- வீரகேரளம்புதூர் செல்லும் ரோட்டில் கலிங்கப்பட்டி விலக்கு அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாசில்தாரிடம் மனு அளித்தனர். தாசில்தார் தெய்வக்கனி இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.