வீரபாண்டியில் கடைகளுக்கு 'சீல்' வைக்க எதிர்ப்பு: தீ்க்குளிக்க முயன்ற பூசாரியால் பரபரப்பு

வீரபாண்டியில் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு தெரிவித்து பூசாரி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2022-10-06 18:45 GMT

கடைகளுக்கு 'சீல்'

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள. கடைகளை சிலர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகி்ன்றனர். இதில் வீரபாண்டியை சோ்ந்த கணேசன் என்பவர் 3 கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் முறைகேடுகள் நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கணேசன் வாடகைக்கு எடுத்த 3 கடைகளில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. மேலும் கணசேன் இறந்ததால் அவரது மகன் செல்வக்குமார் அந்த கடைகளை நடத்தி வந்ததும், அதனை உள் வாடகைக்கு விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி 2 கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த செல்வக்குமார் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தீ்க்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் கேனில் கொண்டு வந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீ்க்குளிக்க முயன்றார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர் வைத்திருந்த டீசல் கேனை பிடு்ங்கி தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் கடைளுக்கு 'சீல்' வைத்தனர். அப்பேதாது அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், செயல் அலுவலர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசாா் ஈடுபட்டனர். கணேசன் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைகளுக்கு 'சீல்' வைக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பூசாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்