அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போடி வள்ளுவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-06-28 12:41 GMT

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போடி வள்ளுவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட தலைவர் முருகேசன், நகர் காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி, போடி வட்டார தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் சன்னாசி, மாவட்ட மகிளா தலைவி கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நகர, ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்